“படைப்பின் உன்னத கொடை மனிதனே “
நல்லதோர் மாணவ சமுதாயத்தை உருவாக்குவது ஒரு பாடசாலையின் குறிக்கோளும் கடமையுமாகும் . எதிர்காலத்தில் உலகிற்கு சேவை செய்ய பயனுள்ள பிரஜைகளை உருவாக்க வேண்டும் . எனில் , எல்லா சவால்களுக்கும் முகங்கொடுக்கக் கூடிய சமனிலை ஆளுமையை பிள்ளைகளில் கட்டி எழுப்ப வேண்டிய முயற்சி அவசியமாகிறது . இக் குறிக்கோளை வெற்றிகரமானதாக்கிக் கொள்ள மாணவனும் பாடசாலை நிர்வாகமும் முக்கிய இடம் வகிப்பதை உணர்ந்த மாஹாவத்தை புனித அந்தேனியார் தமிழ் மகா வித்தியாலயம் நாளுக்கு நாள் வெற்றியின் பாதையில் பயணிக்கும் ஒரு பாடசாலை என்பது உறுதியாகும் . அவ் உன்னத பணிக்காய் பாடுபட்டுளைக்கும் மதிப்பிற்குரிய அதிபர் அருட்சகோதரி சாந்தனா அவர்கட்கும் ஆசிரியர் குழாமிற்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து ஆசீரை பொழியுமாறு இறைவனை பிரார்த்திக்கிறேன் .
படைப்பில் உன்னத இடத்தை வகிக்கும் மனிதன் எப்போதும் தனது சமூகம் , உலகம் , ஊர் , நாடு , குடும்பம் என்பவற்றை புனித தலங்களாக மாற்ற முயலவேண்டும் . எல்லா மனிதரும் தமது பொறுப்புக்களை உணர்ந்துகொண்டு தமது கடமைகளை நிறைவேற்றும் போது தமது அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியுமென்பதை உணர்ந்து கொள்ளவேண்டும் . தனது நாடு , பாடசாலை தனக்கு என்ன செய்கிறது என்ற கேள்வியை விட பாடசாலைக்காகவும் நாட்டுக்காகவும் தான் என்ன செய்ய முடியும் என்பதை நேர்மையான மனச்சான்றுடன் உற்று நோக்கி எதிர்காலத்தில் உத்வேகத்துடன் உழைக்கவேண்டும் . மதிப்புக்குரிய அதிபர் அருட்சகோதரி சாந்தனா , ஆசிரியர் குழாம் , மாணவர்கள் , பெற்றோர் ஆகியோருக்கு புனித அந்தேனியாரின் பரிந்துரையும் உதவியும் மூவொரு இறைவனின் பராமரிப்பும் தூய மரியன்னையின் அன்னைக்குரிய அன்பும் எப்போதும் கிடைப்பதாக .
இறையாளர் . அருட்தந்தை மனோஜ் பர்னார்ந்து – உதவிப் பங்குத் தந்தை கிரான்பாஸ்தூய சூசையப்பர் ஆலயம்

